முதன்மை தேர்வுகளுக்கும் இடையே 9 மாத இடைவெளி மிகவும் அதிகம் என பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட்.
டி.என்.பி.எஸ்.சி தேர்வு அட்டவணை குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் மாவட்ட துணை ஆட்சியர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்கான தேர்வு வரும் ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்படும். நவம்பர் மாதத்தில் முதல் நிலைத் தேர்வு, 2024 ஜூலையில் முதன்மைத் தேர்வு நடத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்திருக்கிறது.
இது வரவேற்கத்தக்கது, டி.என்.பி.எஸ்.சி அடுத்த ஆண்டு மிகக்குறைந்த பணிகளுக்கு தேர்வு நடத்துவதையும், முதல் தொகுதி, இரண்டாம் தொகுதி, மூன்றாம் தொகுதி பணிகளுக்கு தேர்வு நடத்தப்படாததையும் சுட்டிக்காட்டியிருந்தேன். அதையேற்று முதல் தொகுதி தேர்வுகளை சேர்த்து புதிய பட்டியலை வெளியிட்டதில் மகிழ்ச்சி.
முதல் தொகுதி பணிகளுக்கான முதல்நிலை தேர்வுகளுக்கும், முதன்மை தேர்வுகளுக்கும் இடையே 9 மாத இடைவெளி மிகவும் அதிகம். இதை குறைக்க வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை முதல் தொகுதி பணிகளுக்கு தேர்வுகள் நடத்தப்படுவதை டி.என்.பி.எஸ்.சி உறுதி செய்ய வேண்டும்.
இரண்டாம் தொகுதி, மூன்றாம் தொகுதி பணிகளுக்கும் தேர்வுகள் அறிவிக்கப்பட வேண்டும். அனைத்துத் துறைகளிலும் 4 லட்சத்திற்கும் கூடுதலான காலியிடங்கள் உள்ள நிலையில், அவற்றை அடுத்த 3 ஆண்டுகளில் 4 தவணைகளில் நிரப்புவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
மும்பை : இந்தியாவில் பல இடங்களில் சையத் முஷ்டாக் அலி டிராபி நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணியின் மூத்த…
சென்னை : ஐயா விடாமுயற்சி அப்டேட் கொடுங்க என அஜித் ரசிகர்கள் அந்த படத்தின் அப்டேட்டை தினமும் தயாரிப்பாளரிடம் கேட்டுக்கொண்டு வருகிறார்கள்.…
வாஷிங்டன் : அமெரிக்காவில் சூரிய மின்சக்தித் திட்டத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் கவுதம் அதானி மீது பல…
உத்திரபிரதேசம் : மாநிலத்தில் சம்பல் என்ற ஷாஹி ஜமா மசூதி ஒன்று இருக்கிறது. ஆனால், இந்த மசூதி இங்கு இருப்பதற்கு முன்னதாக…
சென்னை : தமிழகத்தின் முதல் பெண் முதல்வரும், எம்ஜிஆரின் மனைவியுமான மறைந்த ஜானகியின் நூற்றாண்டு விழா அதிமுக சார்பில் வானகரத்தில்…
சென்னை : அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் திருநாள் அன்று சிஏ பவுண்டேஷன் தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய…