#Breaking : மின்கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு – மின்சாரவாரியம் அறிவிப்பு

மின்கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு மேலும் 2 வாரங்களுக்குநீட்டிக்கப்பட்டுள்ளதால் மின் கட்டணம் வசூலிக்க தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில்,தமிழகத்தில் மின் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை விதிப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.மேலும் தமிழக அரசும், தமிழ்நாடு மின்பகிர்மான கழகமும் மே 18 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்குஇடையில் புதுகோட்டை உள்ளிட்ட பல இடங்களில் மின்கட்டணம் செலுத்த கூட்டம் அலைமோதியது. இதனால் சமூக இடைவெளி பாதிப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் தமிழக மின்சாரவாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதாவது தாழ்வழுத்த மின் கட்டணம் செலுத்த மே 22 -ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது. மார்ச் 25 -ஆம் தேதி முதல் உள்ள தாமத கட்டணம்,மறு மின் இணைப்பு கட்டணமின்றி செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025