சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள உலக வர்த்தக மையத்தில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு (TNGIM 2024) நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மாநாட்டை நேற்று தொடங்கி வைத்தார். மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல், தமிழக வர்த்தக துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இந்த மாநாட்டில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு வருகின்றனர். அவர்களுடனான பார்வையாளர் கருத்தரங்கும் நடைபெற்று வருகிறது. அப்போது தொழில் முதலீட்டர்களுடனான நேர்காணலும் பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இதனை காண மாணவர்களுக்கு அனுமதி வழங்ப்பட்டுள்ளது.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு – இன்று 2-ஆம் நாள் அமர்வு!
இந்த நேர்காணலில் சமையல் கலை விடீயோக்கள் மூலம் பிரபலமாகியுள்ள வில்லேஜ் குக்கிங் சேனல் (Village Cooking channel) எனும் யூடியூப் சேனல் குழுவினர் கலந்து கொண்டனர். அவர்களிடம் யூ-டியூபில் தனியார் நிறுவனங்கள் விளம்பரத்திற்காக அணுகியுள்ளனரா என தொகுப்பாளர் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு அவர்கள் ஆம், எங்களை ஒரு முன்னணி சாக்லேட் நிறுவனம் விளம்பரத்திற்கு அணுகியுள்ளது என கூறினர்.
மேலும் அவர்கள் கூறுகையில், நாங்கள் யூடியூப் சேனல் ஆரம்பிக்கும் போதே ஒரு கொள்கை வைத்து இருந்தோம். விளம்பரத்திற்காக யாரிடமும் காசு வாங்க கூடாது என கட்டுப்பாடு வைத்து இருந்தோம். கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ படத்தில் நடித்ததற்கு கூட நாங்க காசு வாங்கவில்லை. ஒருவரிடம் காசு வாங்கினால் அதற்காக எங்கள் விடியோவில் ஒரு நிமிஷம் ஒதுக்க வேண்டும். எங்கள் சேனலை பார்க்கும் பார்வையாளர்கள் அதனை கட்டாயமாக பார்க்கும் சூழல் உருவாகும்.
ஒரு முன்னணி சாக்கலேட் நிறுவனம், நாங்கள் 5 மில்லியன் பின்தொடர்வோர்கள் (subscribers) வைத்து இருந்த சமயத்தில் 10 வினாடி விளம்பர வீடியோ பதிவிட 4.5 லட்சம் ரூபாய் தருவதாக கூறினார்கள். தற்போது எங்களிடம் 22 மில்லியன் பின்தொடர்வோர்கள் உள்ளனர். இப்போது அதிகமாக தருவார்கள். ஆனால் அப்போதே விளம்பரங்கள் வேண்டாம் என தவிர்த்து விட்டோம் என கூறினர். மேலும், சமையல் கலையை 1 நிமிஷத்திற்குள் சொல்ல முடியல. அதனால் தான் தற்போது வரை ஷார்ட்ஸ் (YouTube Shorts) வீடியோ பதிவிடவில்லை என வில்லேஜ் குக்கிங் சேனல் சார்ந்தவர்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு (TNGIM 2024) நேர்காணலில் கூறியுள்ளனர்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…