TNGIM2024 : உலக முதலீட்டாளர்கள் மாநாடு… இரண்டாம் நாள் டாப் 10 லிஸ்ட்.!
சென்னை நந்தம்பாக்கத்தில் கடந்த 2 நாட்களாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் உலகளாவில் பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொழில் தொடங்க, தொழிற்சாலை அமைக்க, தொழிற்சாலை விரிவுபடுத்த என பல்வேறு விதமாக முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டது. பல்வேறு புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
TNGIM2024 : புதிய நிறுவனங்கள்… புத்தம் புது வேலைவாய்ப்புகள்.. சின்ன லிஸ்ட் இதோ…
இந்த இரண்டு நாள் மாநாட்டில் மொத்தமாக 6.64 லட்சம் மதிப்பீட்டில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், நேரடி மற்றும் மறைமுக வாயிலாக 26.90 லட்சம் பேருக்கு தமிழகத்தில் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றைய நிறைவு நாள் விழாவில் பேசினார். அதில் இன்று இரண்டாம் நாள் டாப் 10 குழுமம் பற்றிய முக்கிய முதலீட்டு விவரங்களை பார்க்கலாம்….
- டாடா (TATA) குழுமம் பல்வேறு துறைகளில் தமிழகத்தில் 70,800 கோடி ரூபாய் அளவில் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. இதனால், 3,800 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
- அதானி குழுமம் சார்பில் பல்வேறு துறைகளில் 24,500 கோடி ரூபாய் அளவில் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் 4,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
- மத்திய பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் (CPCL ) சார்பில் 17,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நாகையில் புதிய தொழிற்சாலை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் பதியப்பட்டுள்ளது. இதன் மூலம் 2,400 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
- அதானி கனெக்சன் நிறுவனத்தின் சார்பில் 13,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் 1,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
- L&T நிறுவனம், சென்னையில் புதிய ஐடி நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்க 3,500 கோடி ருபாய் மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது..
இதன் மூலம் 40,000 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். - ராயல் என்பீல்ட் நிறுவனம் சார்பில் 3000 கோடி ரூபாய் அளவில் முதலீடு செய்து காஞ்சிபுரத்தில் புதிய இருசக்கர வாகன உதிரிபாகங்கள் தயாரிக்க தொழிற்சாலை அமைக்க ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் 2000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்.
- மைக்ரோசாப்ட் நிறுவனம் சென்னையில் புதிய டேட்டா சேமிப்பு தளத்தை அமைக்க 2,740 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் 167 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளது.
- ஹிந்துஜா குழுமம் தமிழக்த்தில் 2500 கோடி ரூபாய் அளவில் செங்கல்பட்டில் புதிய தொழிற்சாலை அமைக்க முதலீடு செய்ய உள்ளது. இதன் மூலம் 300 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளது.
- கள்ளக்குறிச்சியில் ஹைலி க்லோரி ஃபுட்வேர் எனும் நிறுவனம் 2302 கோடி ரூபாய் செலவில் புதிய காலணி தொழிற்சாலை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு, இன்று அடிக்கல் நாட்டும் விழாவை நடாத்தியுள்ளது. புதிய தொழிற்சாலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினர். இதன் மூலம் 2000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
- ஸ்டெல்லண்டிஸ் குழுமம் திருவள்ளூரில் ஆலை அமைக்க 2000 கோடி ரூபாய் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது.