TNGIM2024 : எந்தெந்த துறைகளில் எத்தனை கோடிகள் முதலீடு.? எத்தனை லட்சம் வேலைவாய்ப்புகள்.?
சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்று மற்றும் இன்று (ஜனவரி 7, 8) உலக தொழிலாளர் மாநாடு (Tamil Nadu Globel Investors Meet – TNGIM 2024) நடைபெற்றது. நேற்று தொடக்க நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநாட்டை துவங்கி வைத்தார். மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார். இரண்டு நாள் மாநாட்டில் தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முன்னிலையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
TNGIM2024 : உலக முதலீட்டாளர்கள் மாநாடு… இரண்டாம் நாள் டாப் 10 லிஸ்ட்.!
இந்த இரண்டு நாள் மாநாட்டில் மொத்தமாக 6.64 லட்சம் மதிப்பீட்டில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், நேரடி மற்றும் மறைமுக வாயிலாக 26.90 லட்சம் பேருக்கு தமிழகத்தில் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றைய நிறைவு நாள் விழாவில் பேசினார். இதில் மிக முக்கிய அம்சங்கள் பற்றிய விவரங்களை கிழே காணலாம்…
- நேரடி வேலைவாய்ப்புகள் – 14 லட்சத்து 54 ஆயிரத்து 712 வேலைவாய்ப்புகள்.
- மறைமுக வேலைவாய்ப்புகள் – 12 லட்சத்து 35 ஆயிரத்து 945 வேலைவாய்ப்புகள்.
மொத்த முதலீடுகள் – 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய்.
- தொழிற்சாலைகள் முதலீடுகள் – 3 லட்சத்து 79 ஆயிரத்து 809 கோடி ரூபாய்.
- எரிபொருள் தொடர்பான முதலீடுகள் – 1 லட்சத்து 157 கோடி ரூபாய்.
- ஊரக வளர்ச்சி தொழில் முதலீடுகள் – 62 ஆயிரத்து 939 கோடி ரூபாய்.
- IT தொழில்நுட்பத்துறை முதலீடுகள் – 22,130 கோடி ரூபாய்.
- சிறுகுறு தொழிற்சாலை முதலீடுகள் – 63 ஆயிரத்து 573 கோடி ருபாய்.