#TNElection: 129 தொகுதிகளில் திமுக Vs அதிமுக நேரடி போட்டி.!

Default Image

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 129 தொகுதிகளில் திமுகவும், அதிமுகவும் நேரடியாக போட்டியிடுகின்றன.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனல் பறக்க தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது கூட்டணி, தொகுதி பங்கீட்டை முடித்து, வேட்பாளர் பட்டியல் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று 173 பேர் கொண்ட திமுக வேட்பாளர்கள் பட்டியலை முக ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து வெளியிட்டிருந்தார்.

இதனிடையே, கடந்த 5-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 6 பேரின் அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர்களின் பட்டியல் வெளியானது. பின்னர் கடந்த 10ம் தேதி 171 பேர் கொண்ட அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை முதல்வர், துணை முதல்வர் வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில் இன்று திமுக வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிடத்தில், தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 129 தொகுதிகளில் திமுகவும், அதிமுகவும் நேரடியாக போட்டியிடுகின்றன என தெரியவந்துள்ளது. மேலும் திமுகவில் 74 எம்எல்ஏக்களுக்கு மீண்டு வாய்ப்பு வழக்கப்பட்டுள்ளது. 20 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

  • போடி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் vs திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன்.
  • எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமி vs திமுக சார்பில் த.சம்பத்குமார்.
  • ராயபுரம் தொகுதியில் ஜெயக்குமார் vs திமுக சார்பில் இ.ரா மூர்த்தி.
  • கரூரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் vs திமுக சார்பில் செந்தில்பாலாஜி.
  • தொண்டாமுத்தூரில் எஸ்.பி.வேலுமணி vs திமுக சார்பில் கார்த்திகேய சேனாதிபதி ஆகியோரை உள்ளிய வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக 129 இடங்களில் நேரடியாக போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்