நவீன முறையில் அவரவர் வீட்டு வாசலிலேயே மின் கட்டணம் வசூலிக்கும் புதிய வசதியை, தமிழக மின் வாரியம் விரைவில் அறிமுகப்படுத்துகிறது.
தமிழகத்தில் உள்ள வீடுகளில், இரு மாதங்களுக்கு ஒரு முறை, மின் வாரிய ஊழியர்கள் மின் உபயோகத்திற்காக கணக்கு எடுக்கின்றனர். நம் பயன்படுத்திய மின் கட்டணத்தை, மின் கட்டண மையங்கள், அரசு, ‘இ – சேவை’ மையங்கள், இணையம் வழி, தபால் நிலையங்களில் செலுத்தலாம். சட்டசபையில், ‘பாயின்ட் ஆப் சேல்’ கருவி வாயிலாக, கிரெடிட், டெபிட் கார்டுகளில், டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தினால், வீட்டு வாசலிலேயே வசூல் என்ற, கூடுதல் வசதி அறிமுகப்படுத்தப்படும். ‘இந்த வசதி, முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், தங்கள் கட்டணத்தை இலகுவாக செலுத்த ஏதுவாக இருக்கும்’ என, மின்துறை அமைச்சர் தங்கமணி அவர்கள் , கடந்த மார்ச் மாதம் அறிவித்தார். இதற்காக,மின்வாரிய ஊழியர்களிடம், பாயின்ட் ஆப் சேல் கருவி வழங்கப்படும். அவர்கள், மின் பயன்பாடு கணக்கெடுத்து, கட்டணத்தை நுகர்வோரிடம் தெரிவிக்கும் போது, பணம் செலுத்த விரும்புவோர், உடனே டிஜிட்டல் முறையில் செலுத்தலாம்.’கியு ஆர் கோடு’ என்ற ரகசிய குறியீட்டை, மொபைல் போனில், ‘ஸ்கேன்’ செய்து, மின் கட்டணம் செலுத்தும் வசதியும் விரைவில் அறிமுகமாக உள்ளது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…
கர்நாடகா : மாநிலத்தில், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
வயநாடு : இந்த ஆண்டில் முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு…
மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த…