வீடு தேடி வரும் மின்வாரியம்… இனி மின் கட்டணத்தை வீட்டிலிருந்தே செலுத்தலாம்… புதிய திட்டம் அறிவிப்பு…

Default Image

நவீன முறையில் அவரவர் வீட்டு வாசலிலேயே மின் கட்டணம் வசூலிக்கும் புதிய வசதியை, தமிழக மின் வாரியம் விரைவில் அறிமுகப்படுத்துகிறது.

தமிழகத்தில் உள்ள வீடுகளில், இரு மாதங்களுக்கு ஒரு முறை, மின் வாரிய ஊழியர்கள் மின் உபயோகத்திற்காக  கணக்கு எடுக்கின்றனர். நம் பயன்படுத்திய  மின் கட்டணத்தை, மின் கட்டண மையங்கள், அரசு, ‘இ – சேவை’ மையங்கள், இணையம் வழி, தபால் நிலையங்களில் செலுத்தலாம். சட்டசபையில், ‘பாயின்ட் ஆப் சேல்’ கருவி வாயிலாக, கிரெடிட், டெபிட் கார்டுகளில், டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தினால், வீட்டு வாசலிலேயே வசூல் என்ற, கூடுதல் வசதி அறிமுகப்படுத்தப்படும். ‘இந்த வசதி, முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், தங்கள் கட்டணத்தை இலகுவாக செலுத்த ஏதுவாக இருக்கும்’ என, மின்துறை அமைச்சர் தங்கமணி  அவர்கள் , கடந்த மார்ச் மாதம் அறிவித்தார். இதற்காக,மின்வாரிய  ஊழியர்களிடம், பாயின்ட் ஆப் சேல் கருவி வழங்கப்படும். அவர்கள், மின் பயன்பாடு கணக்கெடுத்து, கட்டணத்தை நுகர்வோரிடம் தெரிவிக்கும் போது, பணம் செலுத்த விரும்புவோர், உடனே டிஜிட்டல் முறையில் செலுத்தலாம்.’கியு ஆர் கோடு’ என்ற ரகசிய குறியீட்டை, மொபைல் போனில், ‘ஸ்கேன்’ செய்து, மின் கட்டணம் செலுத்தும் வசதியும் விரைவில் அறிமுகமாக உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்