மின் கட்டணத்துடன் கூடுதல் டெபாசிட் தொகை.? மின்வாரியம் எடுத்த அதிரடி முடிவு.!

TNEB

மின் கட்டணத்துடன் கூடுதல் டெபாசிட் தொகை வசூலிப்பதை தற்போது மின்வாரியம் நிறுத்தி வைத்துள்ளது. 

தமிழ்நாடு மின்சார வாரியத்தால் மின் பயன்பாட்டாளர்களிடமிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை டெபாசிட் தொகையானது வசூலிக்கப்படும். வசூலிக்கப்படும் டெபாசிட் தொகையை விட அதிக அளவு மின்சாரத்தை பயனாளர்கள் பயன்படுத்தும் போது, அடுத்த முறை டெபாசிட் தொகையானது கூடுதலாக வசூலிக்கப்படும். இந்த கூடுதல் டெபாசிட் தொகை பற்றி அஞ்சல் வாயிலாகவோ, பதிவு செய்யப்பட்ட மின் பயன்பாட்டாளரின் செல்போன் எண்ணுக்கோ மின்வாரியம் தகவல் தெரிவிக்கும்.

இந்த டெபாசிட் தொகையானது தற்போது வசூலிக்கப்பட்டு வருகிறது. இது மின் கட்டணத்துடன் இந்த டெபாசிட் தொகை வசூலிக்கப்படுவதால் மின் பயன்பாட்டாளர்கள் தற்போது குழப்பம் அடைந்து வருகின்றனர். ஏன் என்றால் தற்போது கோடை காலம் என்பதால் நுகர்வோர்கள் அதிக அளவு மின்சாரத்தை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் டெபாசிட் தொகையோடு இந்த மின் கட்டணமும் சேர்ந்து அதிக கட்டணம் செலுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதற்கு மின் நுகர்வோர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்து உள்ளது.

இதனை தொடர்ந்து, தற்போது தமிழ்நாடு மின்சார வாரியம், முதல்வரின் அறிவுறுத்தலின் பெயரில் , புதிய நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது. அதாவது தற்போது கூடுதல் டெபாசிட் கட்டணம் வசூலிப்பதை மின்சார வாரியம் நிறுத்தியுள்ளது. மேலும் ஏற்கனவே நுகர்வோரிடம் டெபாசிட் தொகை வசூலிக்கப்பட்டு இருந்தால், அந்த தொகையானது அடுத்து வரும் மின் கட்டணத்தில் இருந்து கழித்துக் கொள்ளப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்