#TNBudget2022 : வார்த்தை ஜால தோரணங்களால் அமைக்கப்பட்ட வாய்பந்தல் – ஈபிஎஸ்

Published by
லீனா

2022-23- ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில்  நேற்று தாக்கல் செய்தார்.அதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றது. இந்த நிலையில், பேச தங்களுக்கு அனுமதி வழங்காததால் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

ஈபிஎஸ் அறிக்கை

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழக பட்ஜெட்டை விமர்சித்து, அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,

  • திமுக அரசு தாக்கல் செய்துள்ள 2022-23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை ஒரு ஏமாற்று வெத்துவேட்டு ஆகும். வருவாய் பற்றாக்குறை மதிப்பீடு 55,781.17 கோடி.
  • 2021-22 ஆம் ஆண்டுக்கான கடன் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 175 கோடி வாங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
  • 2022-23 இந்த ஆண்டுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 950 கோடிகடன் வாங்குவதாக அறிவித்துள்ளீர்கள். 2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சியைவிட்டு அகலும் போது சுமார் ஒரு லட்சம் கோடி கடனை விட்டுச் சென்றீர்கள்.
  • 2020 ஆம் ஆண்டு நாங்கள் ஆட்சியை விட்டு செல்லும்போது சுமார் 4.5 லட்சம் கோடி கடன் இருந்தது. அதாவது சுமார் 3.85 லட்சம் கோடிகடன் வாங்கினோம் அவை அனைத்தும் மூலதன செலவுகளுக்காக வாங்கப்பட்டது.
  • ஆனால் நீங்கள் சென்ற ஆண்டு (2021-22) சுமார் 1.08 லட்சம் கோடி, இந்த ஆண்டு (2022-23) 1.20 லட்சம் கோடி என்று இரண்டு ஆண்டுகளில் சுமார் 2.25 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளதாக குறிப்பிட்டு உள்ளீர்கள். இது மூலதன செலவுகளுக்காக அல்லது வேறு செலவுகள் என்று குறிப்பிடவில்லை. குறித்து மூச்சு காட்டவில்லை.
  • கல்வி கடன் தள்ளுபடி பற்றி குறிப்பிடவில்லை. மகளிருக்கான உரிமை தொகை 1,000 ரூபாய் வழங்குவது, பெட்ரோல் டீசல் மீதான வரி குறைப்பு எதிர்பார்த்த மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்பது பற்றி இந்த அரசு எதுவும் தெரிவிக்கவில்லை.
  • விஷம் போல் ஏறி வரும் விலைவாசி உர விலை ஏற்றம் சிமெண்ட் மற்றும் கட்டுமான பொருட்கள் விலை ஏற்றம் குறித்தோ அதை குறைப்பது குறித்து மூச்சு இல்லை. வெள்ள நிவாரணம் இதுவரை விவசாயிகளுக்கு முழுசாக வழங்கப்படவில்லை. பொங்கல் தொகுப்புகள் வழங்கியதில் ஊழல்
  • அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம், ஆறுமாத கால அகவிலைப்படி
    நிலுவை போன்றவை வழங்கப்படவில்லை.
  • சுமார் 10 மாத கால திமுக ஆட்சியில் சுமார் ஒரு லட்சத்து எட்டாயிரம் கோடி வரை கடன் வாங்கி ஆடம்பர செலவு செய்யப்பட்டுள்ளது என்பது இந்த பட்ஜெட் உரை மூலம் தெரிகிறது.
  • தமிழக அரசின் கடன் சுமையைக் குறைக்கவும் வருவாயை பெருக்கவும் ஆலோசனை கூற அமைக்கப்பட்ட ரகுராம் ராஜன் குழு என்னென்ன திட்டங்களை அரசிடம் முன் வைத்துள்ளது என்பது பற்றி எந்தக் குறிப்பும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை.
  • மொத்தத்தில் இந்த விடியா அரசின் நிதிநிலை அறிக்கை வார்த்தை ஜாலங்களால் அமைக்கப்பட்ட வாய்ப்பந்தல்.
  • இதை வாடகைதாரர்கள் வேண்டுமானால் தங்கள் ஆதாயத்திற்காக பாராட்டலாம். மக்கள் நலனில் உண்மையில் அக்கறை கொண்ட யாராலும் இந்த மக்களை ஏமாற்றும் நிதிநிலை அறிக்கையை வரவேற்க முடியாது.

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
லீனா

Recent Posts

ஃபர்ஸ்டு ரஜினி., நெக்ஸ்டு விஜய்.! ராமதாஸ் பேத்தியின் ‘அலங்கு’ படத்திற்கு தீவிர புரொமோஷன்…

ஃபர்ஸ்டு ரஜினி., நெக்ஸ்டு விஜய்.! ராமதாஸ் பேத்தியின் ‘அலங்கு’ படத்திற்கு தீவிர புரொமோஷன்…

சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் பேத்தியும், அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மகளுமான சங்கமித்ரா அன்புமணி ,…

5 minutes ago

“இனி காதல்., பரிசுத்த காதல்”.. ரூட்டை மாற்றிய சூர்யா! ‘ரெட்ரோ’ டீசர் இதோ…

சென்னை: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா இணைந்துள்ள படம் மீது பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது. படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை…

7 minutes ago

வாஜ்பாய் யாரென்று தெரியுமா? நெகிழ்ச்சியுடன் நீண்ட நினைவுகளை பகிர்ந்த பிரதமர் மோடி!

டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…

2 hours ago

இதை செய்தால் விசிக போராட்டத்தில் நான் பங்கேற்க தயார்! அண்ணாமலை பதில்!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…

2 hours ago

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் : வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா!

குஜராத்:  இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…

3 hours ago

உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவரில் தீ விபத்து.!

பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது.…

4 hours ago