2022-23- ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்தார்.அதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றன.இதனிடையே,பேச தங்களுக்கு அனுமதி வழங்காததால் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையை நிறைவு செய்த பின் இன்று காலை 10 மணி வரை சட்டமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.இதைத்தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது.
24-ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர்:
அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு :”தமிழக சட்டப்பேரவையில் மார்ச் 19 ஆம் தேதி வேளாண் துறைக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 24-ம் தேதி வரை நடைபெறும் என அறிவித்தார். வரும் திங்கள்செவ்வாய் மற்றும் புதன் ஆகிய கிழமைகளில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் என அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.மார்ச் 24 ஆம் தேதி பட்ஜெட் மீதான விவாதத்திற்கு நிதியமைச்சர் மற்றும் முதலமைச்சரின் பதில் வரை இடம்பெறும் என தெரிவித்தார்.
இரண்டாவது முறையாக வேளாண் பட்ஜெட்:
இந்நிலையில்,2022-23- ஆம் ஆண்டுக்கான தமிழக வேளாண் துறைக்கான பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது.கடந்த ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் வேளாண்துறைக்கென முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.இதனைத் தொடர்ந்து,2022-23- ஆம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட் தயாரிப்பது குறித்து டெல்டா மாவட்ட விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டது.
இந்நிலையில்,இரண்டாவது முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.இந்த பட்ஜெட்டை தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.
இதில் வேளாண் துறைக்குரிய பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பதிலுரை:
இதனைத் தொடர்ந்து,21, 22, 23 ஆகிய மூன்று நாட்களும் பட்ஜெட் மீதான விவாதம் நடக்கும்.மார்ச் 24 ஆம் தேதி நிதியமைச்சர், வேளாண்துறை அமைச்சர் ஆகியோர் பதிலுரை அளிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…