#TNBudget2022:சற்று முன் தொடங்கியது…தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் முழுமையான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில்,2022-23 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டம் தற்போது தொடங்கியுள்ளது.
நடப்பு ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமை செயலக வளாகத்தில் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில், பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில்,பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்குவது குறித்த அறிவிப்பு இன்றைய பட்ஜெட்டில் இடம் பெறவுள்ளதாக கூறப்படுகிறது. என்ற எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் எழுந்து உள்ளது. மேலும், இந்த பட்ஜெட்டில், திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட பல்வேறு புதிய அறிவிப்புகள் மற்றும் திட்டங்களை அறிவிக்க உள்ளார்.
இதனிடையே,தலைமை செயலகத்தில் எதிர்க்கட்சி தலைவர் அறையில் அதிமுக எம்எல்ஏகளுடன் ஓபிஎஸ், இபிஎஸ் ஆலோசனை நடத்திய நிலையில்,அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டு அவையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.