#TNBudget2020 : தமிழகத்தில் 8 வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள்
தமிழகத்தில் 8 வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள் நிறுவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சர், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.அவரது உரையில், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், கடலூர், விழுப்புரம் மற்றும் மதுரை மாவட்டங்களில் ரூ.218 கோடி மதிப்பில் மேலும் 8 வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள் நிறுவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று துணை முதலமைச்சர், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.