TNBudget 2025 : கிராமச் சாலைகள் மேம்படுத்த ரூ.2,200 கோடி..கலைஞர் கனவு இல்லம் திட்டதில் 1 லட்சம் புது வீடுகள்!
47 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட 500 இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ரூ.1.33 கோடி ஒதுக்கீடு என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை : இன்று, 2025 2026 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் காலை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அதன்படி பட்ஜெட்டில் வந்த முக்கிய சிறப்பு அம்சமாக கிராமச் சாலைகள் மேம்படுத்த ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை மற்றும் கலைஞர் கனவு இல்லம் திட்டதில்1 லட்சம் புது வீடுகள் அறிவிப்பும் இடம்பெற்றுள்ளது.
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 1 லட்சம் புதிய வீடுகள் கட்டப்படும் எனவும், கிராம சாலைகளை மேம்படுத்த ரூ.120 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். அதைப்போல, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு ரூ.1,087 கோடி ஒதுக்கீடு ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சீரமைக்க இயலாத வீடுகளுக்குப் பதிலாகப் புதிய வீடுகள் அமைத்து கொடுக்கும் நோக்கில் ரூ.600 கோடியில் 25,000 வீடுகள் கட்டப்படும் எனவும் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் கிராமச் சாலைகள் மேம்படுத்த 2,000 கிலோமீட்டர் கிராம சாலைகளை மேம்படுத்த 1,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்த முறை 6100 கி.மீ. நீளம் என்பதால் அதைவிட அதிகமான தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025