#TNAssembly: எதிர்க்கட்சி துணை தலைவர் யார்? சட்டப்பேரவையில் அறிவிப்பேன் – சபாநாயகர்
எதிர்க்கட்சி துணை தலைவர் யார் என்பதை பேரவையில் அறிவிப்பேன் என சபாநாயகர் அப்பாவு பதில்.
தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று இரண்டாவது நாளாக கூட உள்ள நிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவைக்கு வருகை சட்டமன்ற உறுப்பினர்கள் சந்தித்துள்ளனர். எதிர்க்கட்சி துணை தலைவராக ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதில் உதயகுமாரை நியமிக்க கோரியதை அங்கீகரிக்க வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் எடுத்த முடிவு குறித்து சட்டப்பேரவையில் அறிவிப்பேன் என நேரில் சந்தித்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்எல்ஏக்களிடம் சபாநாயகர் அப்பாவு பதில் தெரிவித்துள்ளார்.
அதிமுக வில் இ.பி.எஸ் தரப்பில் அளிக்கப்பட்ட கடிதங்கள் குறித்து பரிசீலித்து அவையில் அறிவிக்கப்படும் என கூறியுள்ளார். சபாநாயகரை சந்தித்த அதிமுக எம்எல்ஏக்கள் தற்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக வலியுறுத்தி அதிமுக எம்எல்ஏக்கள் சபாநாயகர் அப்பாவு உடனான சந்திப்பில் உடன்பாடு எட்டவில்லை என கூறப்படுகிறது. எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என ஓ.பன்னீசெல்வம் தெரிவித்திருந்தார்.