#TNAssembly: பாஜகவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
சென்னை மேற்கு மாம்பலம் அயோத்யா மண்டபம் பிரச்சனை தொடர்பாக பேரவையில் பாஜக புகாருக்கு முதல்வர் பதில்.
தமிழக சட்டப்பேரவையில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைப்பெறுகிறது. அப்போது கேள்வி நேரத்தின் முன்னதாக சென்னை மேற்கு மாம்பலம் அயோத்யா மண்டபம் பிரச்சனை குறித்து வானதி சீனிவாசன் பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேவையில்லாத அரசியலை புகுத்தி, அதன் மூலம் பாஜகவை பலப்படுத்த நினைத்தால் அது நடக்கவே நடக்காது என எச்சரிக்கை விடுத்தார்.
ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படக்கூடிய பிரச்னைகளில் பாஜக கவனம் செலுத்த வேண்டும் என்பது என் வேண்டுகோள். சாமானிய மக்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். தமிழகத்திற்கு வரவேண்டிய நிதியை கேட்டு பெறும் முயற்சியில் நீங்கள் ஈடுபட வேண்டும் என்றும் நம் மாநிலத்துக்கு எது சாதகம் என்பதை புரிந்துக்கொண்டு பாஜக உறுப்பினர்கள் நடக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.