#TNAssembly:சட்டப் பேரவையில் இன்று வெளியாகும் மின்சாரத்துறை,வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்புகள்!
தமிழகத்தில் சமீப நாட்களாக நிலவிவரும் மின்வெட்டு தொடர்பாக சட்டப்பேரவையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது.இதற்கு பதில் அளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி,தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது என்றும்,
ஆனால் மத்திய அரசு குறைந்த அளவே நிலக்கரி தருகிறது என்றும் இதனால்தான் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது என்றும் பதில் அளித்தார்.குறிப்பாக,அதிமுக ஆட்சியிலும் 68 முறை மின்வெட்டு இருந்ததாகவும் கூறினார்.இதனையடுத்து,அதிமுக வெளிநடப்பு செய்திருந்தது.
இந்த நிலையில்,தமிழக சட்டப்பேரவையில் இன்று மின்சாரம்,மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை,திறன் மேம்பாட்டு துறை,தொழிலாளர் நலன் ஆகிய துறைகளின் மானிய கோரிக்கைகளின் மீதான விவாதம் நடைபெறவுள்ளது.அதன்படி எதிர்க்கட்சி சட்ட மன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளிக்க உள்ளார்கள்.
அந்த வகையில்,தமிழகத்தில் மின்வெட்டை தவிர்க்க மின் உற்பத்தியை அதிகரிப்பது,மின்சார கொள்முதல்,துணை மின் நிலையங்கள்,பழைய மின் மாற்றிகளை மாற்றி புதிய மின்மாற்றிகள் அமைப்பது உள்ளிட்ட புதிய அறிவிப்புகளை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட உள்ளார்.
அதே சமயம்,வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போருக்கான முக்கிய அறிவிப்புகள தொழிலாளர் நலன்,திறன் மேம்பாட்டு துறை சார்பில் வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.