TNAgriBudget2023 : கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க ரூ.285 கோடி ஒதுக்கீடு..!
2023-24க்கான வேளாண் பட்ஜெட் உரையில் கரும்பு விவசாயிகளுக்கு ரூ.285 கோடி ஒதுக்கீடு.
தமிழக சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அவர்கள், வேளாண் பட்ஜெட்டை உரையை வாசித்து வருகிறார். நேற்று 2023-24-ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மின்னணு வடிவில் இந்த ட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில் இன்று அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட் உரையில், கரும்பு விவசாயிகளுக்கு கொள்முதல் விலையுடன் கூடுதல் ஊக்கத்தொகை வழங்க ரூ.285 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் 200 ஏக்கர் பரப்பளவில், விதை உற்பத்தி செய்து மானிய விலையில் விநியோகிக்க ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.