த.வா.க மாநில மகளிர் அணி செயலாளர் ஜெயலட்சுமி பாலு காலமானார்..!
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில மகளிர் அணி செயலாளர் கொரோனாவால் உயிரிழந்தார்.
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக நாள்தோறும் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றன. மேலும் இந்த கொரோனா வைரஸ் காரணமாக பொதுமக்கள் உட்பட அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலர் உயிரிழந்து வருகின்றன.
இந்நிலையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில மகளிர் அணி செயலாளர் ஜெயலட்சுமி பாலு (45) கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 25-ம் தேதி முதல் காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.