நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்:முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட அதிமுக தலைமை!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம்,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள்,138 நகராட்சிகள்,490 பேரூராட்சிகள் என,649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக வருகின்ற பிப்ரவரி 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது.இதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 22 ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இதன்காரணமாக, அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து வருகின்றன.
இந்நிலையில்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.அதன்படி,கடலூர் மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர், கடலூர் கிழக்கு, கடலூர் வடக்கு, கடலூர் மேற்கு,விழுப்புரம் மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு,அதிமுக சார்பில் போட்டியிடும் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வகையில்,,கடலூர் மாநகராட்சியில் 43 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர் கள் பட்டியல்,சிதம்பரம் நகராட்சியில் 33 வார்டுகள்,விழுப்புரம் நகராட்சி 42 வார்டுகள், திண்டிவனம் நகராட்சி 33 வார்டுகள்,தர்மபுரி நகராட்சியில் 31 வார்டுகள், நெல்லிக்குப்பம் நகராட்சியில் 29 வார்டுகள், பண்ருட்டி நகராட்சியில் 30 வார்டுகள்,விருத்தாசலம் நகராட்சியில் 33 வார்டுகள், திட்டக்குடி நகராட்சியில் 24 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது.இதற்கிடையில்,அதிமுக – பாஜக இடையே இடப்பங்கீடு தொடர்பாக இழுப்பறி நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
#அஇஅதிமுக_வெற்றிநமதே ???????? 3/4 pic.twitter.com/NPb5JNpMw3
— AIADMK (@AIADMKOfficial) January 30, 2022