#Breaking:பொதுத்தேர்வு…இவை கட்டாயமில்லை -மரு.செயலாளர் ராதாகிருஷ்ணன் முக்கிய அறிவிப்பு!

Default Image

தமிழகத்தில் கொரோனா சூழல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு 10, 11 & 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முழுமையாக நடைபெறுகிறதுஅதன்படி,தமிழகம் முழுவதும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இன்று (மே 5-ஆம் தேதி) தொடங்குகிறது.

இதனிடையே,தமிழகத்தில் 10,11,12-ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் மாஸ்க் அணிவது கட்டாயம் என்றும்,தனி மனித இடைவெளிவிட்டு தேர்வு நடைபெற்றாலும் மாஸ்க் அணிந்து எழுதவேண்டும்.தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் கண்காணிப்பாளர்களும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு நேற்று உத்தரவிட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில்,தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய தேவையில்லை என  மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

மேலும்,பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வறைகளில் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்று பரவிய தகவல் தவறானது. ஏனெனில், கொரோனா தொற்று தமிழகத்தில் குறைவாக உள்ளது.எனினும்,சமூக இடைவெளி பின்பற்றிதான் தேர்வுகள் நடைபெறவுள்ளது.அதே சமயம்,கிருமிநாசினி கொண்டு வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Ilaiyaraja
TN CM MK Stalin
MNM Leader Kamal haasan - TN BJP Leader Annamalai
blue ghost mission 1
Singer Kalpana