தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு இன்று (டிசம்பர் 25) முதல் ஜனவரி 2 வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தொற்றின் தாக்கம் சற்று குறைந்த பிறகு,கடந்த சில மாதங்களாகவே பள்ளி,கல்லூரிகள் திறக்கப்பட்டன.மாணவர்களின் நலன் கருதி கட்டுப்பாடுகளுடன் செயல்பட்டு வருகின்றன.
எனினும்,அண்மையில் பெய்த கனமழை மற்றும் மழை வெள்ள பாதிப்பு காரணமாக பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு,கடந்த சில வாரங்களாகவே பள்ளிகள் மீண்டும் செயல்பட்டு வந்தது.
எனவே,மாணவர்களுக்கு அதிகப்படியான விடுமுறை அளிக்கப்பட்டதன் காரணமாக,அரையாண்டு விடுமுறை வழங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தது.இதற்கிடையில்,இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையும்,ஜனவரி 1 ஆம் தேதி ஆங்கிலப் புத்தாண்டும் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு இன்று (டிசம்பர் 25) முதல் ஜனவரி 2 வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக,பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள்,முன்னதாக பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை குறித்து பேசுகையில், “தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் 25 முதல் ஜனவரி 2-ம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை வழங்கப்படும்”,என்று தெரிவித்தார்.
அதன்படி,பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் ஜனவரி 2 வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால்,மாணவர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…