மாணவர்களுக்கு ‘ஹேப்பி நியூஸ்’.! அக். 6ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை.!
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் காலாண்டு தேர்வு முடிந்து வரும் அக்டோபர் 7ஆம் தேதி தான் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெரும் பள்ளிகள் , தனியார் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளிலும் இந்த வாரம் காலாண்டு தேர்வு முடிவடைய உள்ளது. வழக்கமாக காலாண்டு தேர்வு விடுமுறை என்பது அக்டோபர் 2வரையில் மட்டுமே இருக்கும்.
அதேபோல இந்தாண்டும் அக்டோபர் 2 வரையில் மட்டுமே காலாண்டு விடுமுறை அறிவிக்கப்ட்டிருந்தது. வழக்கமாக இல்லாமல் இந்தாண்டு குறுகிய நாட்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் விடுமுறை நீட்டிக்கப்படுமா என்ற கேள்விகள் எழுந்தது. அதற்கு ” இன்றைக்குள் காலாண்டு விடுமுறை நீட்டிப்பு பற்றி அறிவிப்பு வரும்.” என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியிருந்தார்.
இந்நிலையில், தற்போது பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஓர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், ” பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், துவக்க/ நடுநிலை/ உயர்நிலைப் பள்ளிகள் என அனைத்து பள்ளிளும் காலாண்டு தேர்வுகளுக்கான விடுமுறை முடிந்து வரும் அக்டோபர் 7ஆம் தேதி திங்கட்கிழமை அன்று பள்ளிகள் திறக்கப்படும்.” என அறிவிக்கப்பட்டுள்ளது.