தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.!

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு.
தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் இதய நோய் இரத்த சோகை காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.
தென்காசி மற்றும் நெல்லை போன்ற மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் சுமார் 40 கி.மீஇருந்து 50 கி.மீட்டர் வரை காற்று வீசக்கூடும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது .மேலும் தென் கிழக்கு அரபிக்கடல் லட்சத்தீவு, கேரள, கர்நாடகா கடற்கரையை ஒட்டிய பகுதிகளுக்கு அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.