நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் 1,750 ரவுடிகள்… கண்காணிப்பு பணிகள் தீவிரம்.!

Tamilnadu Police

சென்னை: திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசியில் 1,750 பெயர்கள் அடங்கிய ரவுடிகளின் பட்டியலை தமிழக காவல்துறை தயார் செய்துள்ளது.

கடந்த வாரம் பகுஜன் சமாஜ்வாடி கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அதேபோல சேலம் , நெல்லை பகுதியிலும் அரசியல் பிரமுகர்கள் படுகொலை என்பது கடந்த சில மாதங்களில் நிகழ்ந்துள்ளன. இந்த சம்பவங்களை தொடர்ந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பற்றிய பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. நேற்று முன்தினம் சென்னை மாநகர காவல் ஆணையர், தமிழக சட்ட ஒழுங்கு ஏடிஜிபி ஆகியோர் மாற்றம் செய்ப்பட்டனர்.

சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டார். தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக டேவிட்ஸன் தேவாசீர்வாதம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவின் பெயரில் தமிழக காவல்துறைக்கு உத்தரவை பிறப்பித்தார்.

அதன்படி தென் மாவட்டங்களான திருநெல்வவேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள ரவுடிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 1750 நபர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. அதில் 400 நபர்கள் மட்டும் பல்வேறு காரணங்களால் வெளியில் இருக்கின்றனர் என்றும் மீதம் உள்ளவர்கள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ரவுடிகளின் பட்டியலில் உள்ள 400 நபர்களை கண்காணிக்க தலா ஒரு போலீசார் வீதம் ஷிப்ட் பணிநேரம் விதித்து 24 மணிநேரமும் அவர்களை கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும், அவர்களின் நடவடிக்கைகள் குறித்து நெருக்கமான கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் கூறப்பட்டுள்ளது என்றும், சிறையில் உள்ள ரவுடிகளின் வழக்கு விவரங்களையும் சேகரிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்