எரித்து கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற சென்ற அரசியல் தலைவர்கள் மீது வழக்குபதிவு….
விழுப்புரம் மாவட்டத்தில் சிறுமதுரைக்கு ஊரடங்கை மீறியதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் முருகன் ஆகியோர் மீது தமிழக சீர்மிகு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
றுதவிழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தில் முன்விரோதம் காரணமாக 10ஆம் வகுப்பு படிக்கும் குழந்தையை கை, கால்களை கட்டி வைத்து தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான அந்த குழந்தையின் கடைசி வாக்குமூலம் இணையத்தில் வைரலாகி அனைவரையும் கண்கலங்க செய்தது. இந்நிலையில், இந்த கொடூர சம்பவத்தில் கொலை செய்த அதிமுக பிரமுகர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த தமிழ்நாடு முதல்வர், கைதான இருவரையும் கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தார்.
இந்த நிலையில், நேற்று கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து தேசிய முற்போக்கு திராவிட கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் முருகன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இந்நிலையில், அவர்கள் ஊரடங்கு உத்தரவை மீறி கூட்டமாக சென்றதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், மற்றும் தமிழக பாஜக தலைவர் முருகன் உள்ளிட்ட 40 பேர் மீது திருவெண்ணைநல்லூர் சீர்மிகு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.