தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 1ம் தேதி புதன் கிழமை முதல் சீர்மிகு தமிழக காவல்துறை முழுவதும் நவீனமயமாக மாற்றப்பட உள்ளது என்று உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.ஏற்கனவே, தமிழக காவல்துறையில், புகார் அளிப்பது, அரசு பணிகளில் சேருவதற்கான நன்னடத்தை சான்று பெறுவது உட்பட பெரும்பாலானவை இனையதளம் மூலம் நவீன மயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து காவல்நிலையங்களிலும், தமிழக டிஜிபி உத்தரவுகள் தொடங்கி அனைத்து தகவல் பரிமாற்றங்களும் இ-மெயில்கள் மூலமாக மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வரும் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து அமல்படுத்தப்பட உள்ளது என்று காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், காவல்துறையில் தற்போது வரையில் கடிதப்போக்குவரத்து பின்பற்றப்படுகிறது. தபால் மூலமாகவும் சில உத்தரவுகள் அனுப்பி வைக்கப்படுகிறது. அதோடு காவல்நிலையங்களில் தபால் கொண்டு செல்லவும், தபால் டியூட்டி என்று தனியாக காவலர்களுக்கு வழங்கப்படுவது தற்போதும் வழக்கத்தில் உள்ளது. இனி காவல்துறை முழுவதும், காகிதப்பயன்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு வரும் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து ஸ்கேனர், இ-மெயில் என்று காவல்துறை முழுவதும் இ-அலுவலங்களாக மாற்றப்பட உள்ளது. இதன்மூலம் அனைத்து ஆவணங்கள் பரிமாற்றமும் இணையதளம் மூலமாக மேற்கொள்ளப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…
சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…
அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…