கோட்டை விடும் காவல் துறை…. மதுவிலக்கு பிரிவு தூங்குகிறதா?….. நாகர்கோவிலில் நாகமாய் படம் எடுக்குமா? காவல்துறை….
கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில் சைமன் நகர் பகுதி என்பது இந்த நகரின் முக்கிய பகுதியாகும். இந்த பகுதியை சுற்றித்தான் மாவட்ட ஆட்சியர் இல்லம்,மாவட்ட கண்காணிப்பாளர் இல்லம் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளின் இல்லம் அமைந்து உள்ளது.மேலும் பல முக்கிய புள்ளிகள், தொழிலதிபர்கள் என பலதரப்பட்டனர் இந்த பகுதியில் தான் இருக்கிறார்கள். மேலும் ராணுவ கேண்டீனும் இந்த பகுதியில்தான் அமைந்து இருக்கிறது.
இந்த பகுதியில் ராணுவ மது வகைகள் அதிகளவில் இந்த பகுதியில் விற்பனை ஆகிறது.ராணுவ மது ரகங்களை கேரளாவில் இருந்தும் வாங்கி வந்து விற்பனை செய்கிறார்கள். அதுவும் அதிகவிலை நிர்ணயம் செய்து விற்கப்படுகிறது.அந்த மதுவகைகளை விற்பனை செய்பவர்களின் இருசக்கர வண்டி எண்,அவர்களது முகவரி வரை கொடுத்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குமுறுகின்றனர். விற்பனை நடைபெறும் இடம் ஆசாரிபள்ளம் காவல்நிலைய எல்லைக்கும் நேசமணிநகர் காவல் நிலைய எல்லைக்கும் இடையே வருகிறது.
எனவே அங்கு திருட்டுத்தனமாக மது விற்பனை கும்பல் இரு காவல் நிலையங்களையும் கவனிக்க வேண்டிய வகையில் கவனித்து திருப்தியாக விடுகிறார்கள் என்றும், இதனால் காவல் நிலையத்துக்கு எத்தனை புகார்கள் சென்றாலும் அது கண்டு கொள்ளப்படவில்லை என்றும், ஏழை எளிய மக்கள் உடல் அசதிக்காக வாங்கி வைத்திருக்கும் தமிழ்நாடு அரசின் தயாரிப்பு மதுவை மடக்கி பிடிக்கும் காவல் துறையினர், பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெறும் ராணுவ ரக மது வகைகளை விற்பனை செய்யும் கும்பலை கண்டு கொள்வதில்லையே ஏன்? என்பது தான் பொதுமக்கள் காவல்துறையைக்கண்டு குமுறுகின்றனர்.