வாகன விபத்தில் மரணமடைந்த காவலர்  குடும்பத்திற்கு  7,14,000 ரூபாயை அளித்து உதவிய சக காவலர்கள்…

Default Image
வாகன விபத்தில் இறந்த சீர்மிகு காவலர் அமரர்.ராம்கி என்பவரது  குடும்பத்திற்கு  7,14,000 லட்ச ரூபாய் பணத்தை வீடு தேடி சென்று வழங்கிய சக காவலர்களின் மனித நேய உள்ளம்.
 
செங்கல்பட்டு மாவட்டம் மெய்யூரை சேர்ந்தவர் ராம்கி என்பவர். இவர்  கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற காவலர் தேர்வில் தேர்வாகி தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்தார். பின் இவர் சென்னை ஆயுதப் படையில் காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த மே மாதம் 3-ஆம் தேதி இரவு, பணி முடித்து தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் காவலர் ராம்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதனை அறிந்த 2013-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த அனைத்து காவலர்கள் மற்றும் சக காவலர்கள் சமூக வலைதளங்களான டெலகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற செயலிகள் மூலமாக இந்த விவரத்தை பதிவிட்டுள்ளனர். இதை தொடர்ந்து காவலர்கள் தங்களால் இயன்ற பண உதவியை ஒரு குறிப்பிட்ட வங்கி கணக்கில் செலுத்தி வந்தனர். அவ்வாறு செலுத்தப்பட்ட பணம் ரூபாய் 7.14 லட்சம் சேர்ந்தது. இதை ராம்கி அவர்களின் குடும்பத்தாரிடம்  மே 20-ஆம் தேதி  அந்தப் பணத்தை ஒப்படைத்தனர். இந்த மனித நேயமிக்க செயல் காவலர்களின் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. இவர்களின் இந்த சுய முயற்சி அனைத்து காவலர்கள் மீதான மதிப்பை மேலும் உயர்த்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
NZ vs BAN
Ilayaraja Biopic
mp sudha anbumani
Jayalalithaa and pm modi
nzvsban
vidaamuyarchi ott release date