முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் போன்ற நாடுகளுக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் இப்போது லண்டனில் உள்ளார். அவரோடு சுகாதாரதுறை அமைச்சர் விஜய பாஸ்கரும் சென்றிருந்தார். இதனைத்தொடர்ந்து தமிழக அமைச்சர்களும் வெளிநாடு பயணம் மேற்கொள்ள உள்ளனர். சிலர் சென்றுவிட்டனர்.
தமிழக முதல்வர் செப்டம்பர் 1மற்றும் 2ஆம் தேதிகளில் அமெரிக்கா செல்கையில் அவருடன் அமைச்சர்கள் ஆர் பி உதயகுமார், ராஜேந்திர பாலாஜி, உடுமலை ராதாகிருஷ்னன், போன்றோர் செல்ல உள்ளனர். அதேபோல வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வனத்துறை சம்பந்தமாக சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகளில் வன துறை சம்பந்தமான ஆய்வுகளை அதிகாரிகளுடன் சென்று மேற்கொள்ள உள்ளார்.
மேலும் தொழில் வளத்துறை அமைச்சர் நிலோஃபார் கஃபில் ரஷ்யா சென்று திரும்பி உள்ளார்.அதே போல பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பின்லாந்து சென்று கல்வித் துறை சம்பந்தமான ஆய்வுகளை அதிகாரிகளுடன் சென்று பார்வையிட சென்றுள்ளார். மேலும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் மொரிஷியஸ் சென்றுள்ளார்.
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் அதிபர்…
வயநாடு : கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைதேர்தல் கடந்த நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில்…
சென்னை : நடைபெற்ற மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
மும்பை : இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது என்றாலும், பலரது கண்களும்…
டெல்லி : இந்தியாவின் முக்கிய மாநிலமான மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு யார் ஆள போகிறார்கள்…