11,750 பொறியியல் இடங்களுக்கு 23,371 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.! தமிழக அமைச்சர் தகவல்.!
அரசி பள்ளி மாணவர்களுக்கு பொறியியல் பட்டப்படிப்பில் சேர 11,750 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் அதில் சேர 23,371 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழக அரசு பள்ளிகளில் படித்த 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அரசனது புதியதாக 7.5 சதவீத இடஒதுக்கீடு ஒதுக்கியது. அதன் படி தமிழக பொறியியல் கல்லூரியில் 11,750 காலி இடங்கள் ஒதுக்கப்பட்டன.
இது குறித்து இன்று முக்கிய தகவலை தமிழக உயர்கல்வி அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். அதாவது, தமிழக அரசு ஒதுக்கிய 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் படி 11,750 இடங்கள் ஒதுக்கப்பட்டன.
அதில் 5000 இடங்கள் மாணவிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது . 11,750 இடங்களுக்கு மொத்தமாக 23,371 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். என கூறினார்.