திமுகவை குறிவைத்து ஐடி சோதனை… அஞ்சமாட்டோம்.! அமைச்சர் எ.வ.வேலு பேட்டி.!

Minister AV Velu says about IT Raid

தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் எ.வ.வேலு. இவரது வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 2-ம் தேதி முதல் வருமான வரித்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இவருக்கு சொந்தமான நிறுவனங்களில் வரி எய்ப்பு நடந்ததாக புகார்கள் எழுந்ததை தொடர்ந்து வருமானவரித்துறையினர் சோதனை தொடர்ந்தது. கடந்த 2ஆம் தேதி முதல்  தொடங்கிய சோதனை அவரது வீட்டில் நேற்று நிறைவுபெற்றது.

சென்னை , திருவண்ணாமலை உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த வருமானவரித்துறை சோதனையானது நடைபெற்றது. அமைச்சர் வீடு, அலுவலகம், அமைச்சரின் உறவினர்களின் வீடு, அலுவலகம், அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் கம்பன் வீடு, அலுவலகம், அருணை கல்லூரி வளாகங்களிலும் நடைபெற்றது. மேலும், தொடர்ந்து காசா கிராண்ட் நிறுவனம் மற்றும் அப்பாசாமி ரியல் எஸ்டேட் போன்ற கட்டுமான நிறுவனங்களிலும் இந்த சோதனை நடைபெற்றது.

இந்த வருமான வரி சோதனை அமைச்சர் வீடு அலுவலகம் ஆகிய இடங்களில் நிறைவடைந்ததை தொடர்ந்து, அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், இது போன்ற வருமானவரித்துறை சோதனைக்கு நான், எனது தலைவர் திமுக தொண்டர்கள் யாரும் அஞ்சப்போவது இல்லை. என்னிடமிருந்து ஒரு பைசாவை கூட வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்யவில்லை. இதன் மூலம் எங்கள் தேர்தல் பணிகளை முடக்கி விட முடியாது. என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், நான் தங்கும் விடுதியிலும் கூட வந்து சல்லடை போட்டு அதிகாரிகள் தேடி சோதனை செய்து வருகின்றனர். எனது மனைவி பிள்ளைகள் எல்லாருக்கும் மன உளைச்சல் ஏற்படுத்தும் அளவுக்கு வருமானவரித்துறை அதிகாரிகள் நடந்து கொண்டனர். மேலும், காசா கிராண்ட் நிறுவனத்திற்கும் அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கும் சோதனை நடைபெறுவதாக சொல்கிறார்கள். அவர்கள் யார் என்று எனக்கு தெரியாது என்றும், அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்.

கோயமுத்தூர் செல்லும்போது அரசு விடுதியில் இடம் இல்லை என்றால் அப்பாசாமி ஹோட்டலில் தங்குவேன். அப்போது அமைச்சர் என்றோ சட்டமன்ற உறுப்பினர் என்றோ என்னை வரவேற்று இருக்கலாம். அது கூட எனக்கு நினைவில்லை. கடந்த இரண்டு நாட்களாக காசா கிராண்டில் 100 கோடி புடித்துவிட்டார்கள். அப்பாசாமி நிறுவனத்தில் 100 கோடி புடித்துவிட்டார்கள் என்று தகவல் வருகிறது. நான் அழுத்தமாக சொல்கிறேன் எனக்கும் அந்த நிறுவனத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

உங்களுக்கு சம்பந்தமானவர்களின் வீடுகளில் ஐடி ரெய்டு நடப்பதாக கூறினால் அங்கு பணம் கைப்பற்றப்பட்டது என்றால் அது உங்களுக்கு சொந்தமான பணம் என்று கூறி விட முடியாது. எனது வீட்டிலோ, என்னுடைய பிள்ளைகள் வீட்டிலோ எனது கல்லூரி வளாகத்திலோ பணத்தை பறிமுதல் செய்து இருந்தால் கூட நான் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். மற்றபடி மற்றவர்கள் தொழில் செய்வதற்கு அவர்கள் சரியாக கணக்கு காட்டவில்லை என்றால் அதற்கு நான் பொறுப்பாக முடியாது. வெளியில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என்றும் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்