பொது ஊரடங்கு விவகாரம்… முதல்வர் இன்று ஆட்சியர்களுடன் ஆலோசனை…

Default Image

தமிழகத்தில் பொது ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது தளர்த்தலாமா என மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் குழுவினருடன், முதல்வர் பழனிசாமி இன்று(செப்டெம்பர்,29) ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகத்தில் பொது ஊரடங்கு வரும் செப்டெம்பர், 30ம் தேதி வரை அமலில் உள்ளது. எனவே மக்களின் வாழ்வாதாரம் கருதி பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதில், திரையரங்குகள், நீச்சல் குளம் போன்றவற்றை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் ஐந்து பேருக்கு மேல் கூடக்கூடாது. திருமணத்தில் 50 பேர்; இறுதி சடங்கில் 25 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது என்பது உட்பட சில கட்டுப்பாடுகளும் உள்ளன. இந்நிலையில், சில மாவட்டங்களில் கொரோனா வைரஸ் நோய் தொற்று  பரவல் அதிகரித்தபடி உள்ளது. எனவே பொது ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது தளர்த்தலாமா என்று அனைத்து மாவட்டஆட்சியர்களுடன்  இன்று காலை 10:00 மணிக்கு தலைமை செயலகத்தில்’ காணொளி காட்சி’ வழியே முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். இதன்பின்,  மதியம் 3:00 மணிக்கு மருத்துவ நிபுணர்களுடனும்  ஆலோசனை நடத்துகிறார். அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின் ஊரடங்கு தொடர்பான அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்