உள்ளாட்சி தேர்தல் விறுவிறு வாக்குப்பதிவு! இதுவரை 24.08 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது!
- உள்ளாட்சி தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.,
- இந்த தேர்தலில் 11 மணி வரை 24.08 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
தமிழகத்தில் இன்று 27 மாவட்டங்களில் உள்ள 156 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் 1.30 கோடி வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஒன்றிய வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் என நான்கு பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
நான்கு பதவிகளுக்கும் நான்கு விதமான நிறம் கொண்ட வாக்குச்சீட்டு பயன்படுத்தப்படுகின்றன. விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் முதல் கட்ட வாக்கு பதிவில் காலை 11 மணி வரை தமிழகத்தில் 24.08 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.