தமிழக மருத்துவ பணியாளர்கள் கவனத்திற்கு… அரசின் முக்கிய அறிவுரைகள்.!
சென்னை : சுகாதாரப் பணியாளர்கள் நோயாளிகளிடம் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தமிழக சுகாதாரத்துறை பாதுகாப்பு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சகம், தமிழக சுகாதார பணியாளர்களின் நலன் கருதி பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு இயக்குனரகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், நோயால் பாதிக்கப்பட்ட சிகிச்சைக்காக வரும் நோயாளிகளிடம் இருந்து மருத்துவ பணியாளர்கள் தங்களை பாதுகாப்பாக வைத்திருக்க வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் :
- அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்.
- கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும்.
- நோயாளியை பரிசோதிக்கும் பொழுது மருத்துவப் பணியாளர்கள் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும்.
- நோயாளிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை முறையாக கையாள வேண்டும்.
- ஊசி போன்ற கூர்மையாக உள்ள உபகரணங்களை பாதுகாப்பான முறையில் பயன்படுத்த வேண்டும்.
- மருத்துவ பணியாளர்கள் அனைவரும் முறையாக ஹெபடைடிஸ் பி தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.
- மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.
உள்ளிட்ட பாதுகாப்பு நெறிமுறைகளை மருத்துவ பணியாளர்கள் முறையாக பின்பற்றி நோயாளிகளிடம் இருந்து தங்களை பாதுகாத்துக்கொண்டு சேவையாற்ற வேண்டும் என அறிவுரைகளை வெளியிட்டுள்ளது.