மிகச் சிறந்த முறையில் ஆட்சி செய்ய ஒன்றிணைந்து செயல்படுவோம் – முதலமைச்சர் பழனிசாமி
மிகச் சிறந்த முறையில் ஆட்சி செய்ய தொடர்ந்து ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் சிறந்த முறையில் ஆட்சி செய்யும் மாநிலங்களின் பட்டியலை பொது விவகாரங்களுக்கான மையம் என்ற ஒரு ஆய்வு அமைப்பு வெளியிட்டு வருகிறது.இதற்கு கஸ்தூரி ரங்கன் தலைவராக இருக்கிறார்.இவர் இஸ்ரோவின் முன்னாள் தலைவர் ஆவார்.
இந்த தரவரிசை பட்டியல் ,மாநிலங்களின் நிலையான வளர்ச்சியின் அடிப்படையில் அதன் நிர்வாக செயல் திறனை அளவிட்டு வெளியிடப்படுகிறது.இதனிடையே 2020-ஆம் ஆண்டுக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.அந்த பட்டியலில் சிறந்த நிர்வாகம் நடைபெறும் மாநிலங்கள் பட்டியலில் கேரளா முதலிடம் பிடித்துள்ளது. தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது .
இந்நிலையில் இது குறித்து தமிழக முதலமைச்சர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,தமிழ்நாடு இந்தியாவின் சிறந்த நிர்வாக மாநிலங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது நமது அயராத முயற்சியின் விளைவாகவும், மாநிலத்தின் வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பின் விளைவாகும். நம் இந்தியாவில் மிகச் சிறந்த முறையில் ஆட்சி செய்ய தொடர்ந்து ஒன்றிணைந்து செயல்படுவோம், கடினமாக உழைப்போம் என்று தெரிவித்துள்ளார்.
TN has been rated as one of the best governed states in India. This is a result of our unwavering effort and commitment to the development of the state. Let us continue to work together, and work harder, to keep our state the best governed one in India.https://t.co/0zSTnhE0ca
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) October 31, 2020