ரூ.6 கோடி ஒதுக்கீடு! அரசு பள்ளி மாணவர்களின் உயர் கல்வி செலவை அரசே ஏற்கும் – அன்பில் மகேஸ்

அரசுப்பள்ளி மாணவ,மாணவிகளின் உயர் கல்விக்கான செலவை தமிழக அரசே ஏற்கும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார்.

tn govt school students

சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை தமிழக அரசே ஏற்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், அதற்கு பள்ளி கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஸ் நன்றியை தெரிவித்து இந்த முக்கிய செய்தியை தனது எக்ஸ் வலைதள பக்கத்தின் மூலம் அறிவித்திருக்கிறார்.

இது குறித்து அன்பில் மகேஸ் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறிருப்பதாவது “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நமது அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக்காக மற்றுமொரு மகத்தான அரசாணையை இன்று வெளியிட்டுள்ளார். அரசுப் பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று நம் நாட்டில் செயல்பட்டு வரும் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அனைத்து மாணவர்களின் கல்விச் செலவினை அரசே முழுமையாக ஏற்கும்.

மேலும், அயல்நாட்டு உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி உதவித் தொகை பெற்றுச் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் முதல் பயணத் தொகையை முழுமையாக இவ்வரசே ஏற்றுக்கொள்ளும். இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்” என  முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்.

நம் தமிழ்நாட்டு மாணவர்களை உலகம் போற்றும் அறிஞர்களாக உருவாக்க, இந்தியாவிற்கே முன்மாதிரியான பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மாணவர்கள், ஆசிரியப் பெருமக்கள் மற்றும் பெற்றோர்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என கூறி அதற்கான அரசாணையையும் அன்பில் மகேஸ்  வெளியிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்