குடியரசு தினவிழா அணிவகுப்பு நிகழ்ச்சிகளில் குழந்தைகள், பொதுமக்கள் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியக் குடியரசு திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் அவர்கள் ஜனவரி திங்கள் 26-ஆம் நாள் காலை 8.00 மணிக்கு தேசியக் கொடியினை ஏற்றி சிறப்பிப்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்ட தியாகிகளும், பொது மக்களும், மாணவர்களும், பள்ளிக் குழந்தைகளும் பங்கேற்பர்.
கொரோனா தொற்றால் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு, பள்ளிக் குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் நிகழ்த்தும் கலை நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட்டுள்ளன. சுதந்திர போராட்ட வீரர்களின் வயது மூப்பினை கருத்தில் கொண்டும், கொரோனா தொற்று பரவலை தவிர்க்கும் விதமாக மாவட்டந்தோறும் சுதந்திர போராட்ட வீரர்களின் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் மூலம் பொன்னாடை போர்த்தி, உரிய மரியாதை அளித்திட மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
குடியரசு தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நேரடியாக ஒளி/ஒலி பரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தை தவிர்க்கும் வகையில், இந்தாண்டு, பொது மக்கள், மாணவர்கள் பள்ளிக் குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள், விழாவைக் காண நேரில் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குடியரசு தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி / வானொலியில் கண்டு கேட்டு மகிழுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு…
சென்னை : தமிழ்நாடு தேசிய கல்வி கொள்கையை ஏற்றால் டான் நிதி தருவோம் என்ற நிலைப்பாட்டுடன் இருப்பதாகவும், தேசிய கல்வி…
டெல்லி : வக்பு வாரியம் என்பது இஸ்லாமிய மக்களால் தானமாக வழங்கப்பட்ட சொத்துக்களை நிர்வகிக்கும் ஒரு இஸ்லாமிய அமைப்பு ஆகும்.…
சென்னை : எம்.ஜி.ஆர் - சிவாஜி காலத்தில் இருந்து சினிமாவில் பாட துவங்கி, தற்போது அஜித் - விஜயை தொடர்ந்து…
ஆப்கானிஸ்தான் : அணியில் பந்துவீச்சில் தூண் என்றால் லெக்-ஸ்பின்னர் ரஷித் கான் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அணியின் வளர்ச்சிக்கு…
சென்னை : மும்மொழிக் கொள்கை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் "பெரியார், அண்ணா, கலைஞர்…