சென்னை: கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில் பலர் அருந்திய விஷ சாராயத்தில் 8.6 சதவீதம் முதல் 29.7 சதவீதம் அளவுக்கு மெத்தனால் இருந்ததாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிகழ்வு நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சியினர் இந்த சம்பவம் குறித்து தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்று அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு விசாரணை இன்று வருகையில், கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் இதுவரை தமிழக அரசு முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி தலைமை செயலர் சிவதாஸ் மீனா உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். அதில் பல்வேறு முக்கிய தகவல்கள் கூறப்பட்டு இருந்தன.
அதில், சம்பவம் நடந்த உடன் உடனடியாக மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று உடனடி நடவடிக்கையை மேற்கொண்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை தர ஏற்பாடு செய்யப்பட்டது. உயிரிழந்தோர் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாயையும், பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் தொகையும் நிவாரணமாக வழங்கப்பட்டது.
முதலமைச்சரின் உடனடி உத்தரவின் பெயரில் மா.சுப்பிரமணியன், ஏ.வ.வேலு ஆகியோர் கள்ளக்குறிச்சி விரைந்தனர். அடுத்து, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். தமிழக அரசின் உத்தரவின் பெயரில் குற்றவாளிகளை கண்டறியவழக்கானது சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 3 வழக்குகள் பதியப்பட்டன.
கள்ளக்குறிச்சி ஆட்சியர், ஏடிஜிபி ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர். 9 காவல் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக முழுதான அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதுவரை சிபிசிஐடி போலீசார் 132 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். 6 குழுக்கள் பிரிக்கப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக டிஜிபிக்கள் இந்த வழக்கை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் மெத்தனால் 8.6 சதவீதம் முதல் 29.7 சதவீதம் வரையில் இருந்தது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது என்று பல்வேறு முக்கிய தகவல்களை தலைமை செயலர் சிவதாஸ் மீனா அறிக்கையில் குறிப்பிட்டள்ளார்.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ததை அடுத்து, இந்த வழக்கு விசாரணையை அடுத்த வாரம் வியாழக்கிழமை (ஜூலை 11) அன்று ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள்,…
ஹைதராபாத்: 'புஷ்பா 2' சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண் உயிரிழந்ததற்கு, 'போலீஸ் சொன்னதை மதிக்காமல், அல்லு அர்ஜுன்…