விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் சிறப்பு சலுகைகளை அளித்த தமிழக அரசு.!
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அமலில் இருப்பதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு புதிய அறிவிப்புகளை அவ்வப்போது அறிவித்துள்ளது.
அதன்படி, விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை விற்பனை செய்ய ஏதுவாக மாவட்ட, மாநில அளவில் தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது. காய்கறி, பழங்களை குளிர்பதன கிடங்குகளில் வைப்பதற்கான பயன்பாட்டு கட்டணம் வரும் ஏப்ரல் 30ம் தேதி வரை வசூலிக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாய விளைபொருட்களை விற்பனை செய்யும் உழவர் உற்பத்தியாளர் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும் எனவும், மேலும், ஏப்ரல் 30ம் தேதி வரை வியாபாரிகள் செலுத்தும் 1% சந்தை கட்டணத்தை செலுத்த வேண்டாம் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.