போட்டித் தேர்வு ஆர்வலர்களுக்காக கல்வித் தொலைக்காட்சியில் தனி அலைவரிசை மற்றும் அதற்கான பணிகளை மேற்கொள்ள ரூ.50 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை.
இந்திய குடிமைப் பணித் தேர்வுகள்,தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்வேறு தேர்வுகள்,ரயில்வே தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகள்(UPSC, TNPSC, RRB) உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுபவர்கள் பயன்பெறும் வகையில்,கல்வித் தொலைக்காட்சியில் தனி அலைவரிசை உருவாக்கப்பட்டு பாடங்கள் கற்பிக்கப்படும் என்று கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவிப்பு விடுத்திருந்தது.
இந்நிலையில்,மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்திய குடிமைப் பணித் தேர்வுகள்,இந்திய பொறியியல் பணித் தேர்வுகள்,தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்வேறு தேர்வுகள்,வங்கித் தேர்வுகள்,ரயில்வே தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகள் என பல்வேறு போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் ஆர்வலர்கள் பயன் பெறும் வகையில்,கல்வித் தொலைக்காட்சியில் போட்டித் தேர்வுக்கென்று தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் தனி அலைவரிசை அமைத்து போட்டித் தேர்வுகளுக்கான பாடங்கள் ஒளிபரப்பவும்,தனி அலைவரிசையை ஏற்படுத்தும் பணிகளை மேற்கொள்ள 50 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…