மேயர் பதவி இடஒதுக்கீடு-அரசிதழில் வெளியீடு
- தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது
- உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவிகளுக்கான இடஒதுக்கீடு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9 ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில் டிசம்பர் 16 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த நிலையில் தமிழக உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவிகளுக்கான இடஒதுக்கீடு குறித்த அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ,வேலூர் மாநகராட்சி மேயர் பதவி – பட்டியலின பிரிவு (பெண்), தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவி – பட்டியலின பிரிவினருக்கு (பொது) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருச்சி, நெல்லை, நாகர்கோவில், திண்டுக்கல், மதுரை, கோவை, ஈரோடு உள்ளிட்ட மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு (பொது) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றுள் சென்னை, சேலம், திருப்பூர், தஞ்சாவூர் ,ஓசூர் ,ஆவடி ஆகிய மாநகராட்சிகள் பொது பிரிவினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.