தமிழகத்தில் ஹோட்டல்களுக்கான வழிபாட்டு நெறிமுறைகள் வெளியீடு
தமிழக அரசு ஹோட்டல்களுக்கான வழிபாட்டு நெறிமுறைகள் வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக 3 ம் கட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், மாநில அளவிலான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, செப்டம்பர் 30 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்தது. மத்திய அரசை தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கை, செப்டம்பர் 30- ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். அதன்படி தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், ரிசார்ட்கள், கேளிக்கை விடுதிகள் மற்றும் பிற விருந்தோம்பல் சேவைகள் (CLUBS) நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில் தமிழக அரசு கிளப், ஹோட்டல்களுக்கான வழிபாட்டு நெறிமுறைகள் வெளியிட்டுள்ளது.அதன்படி ,உணவகத்தில் உணவு தயாரிக்கும் பணியாளர்கள் முகக்கவசம் அணிய வேண்டும். ஹோட்டல் வரவேற்பறையில் கிருமி நாசினி கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஹோட்டல்கள் செயல்பட அனுமதி இல்லை.வாடிக்கையாளர்களுக்கு உடல் வெப்பநிலையை பரிசோதித்த பின்னரே அனுமதி அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.