#Breaking:மகிழ்ச்சி செய்தி…இவர்களுக்கான உதவித்தொகை ரூ.2,000 ஆக உயர்வு – தமிழக அரசு அரசாணை!
தமிழகத்தில் ஐந்து வகையான மாற்றுத் திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித் தொகையினை ரூ.1,500 -லிருந்து ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்க நிர்வாக ஒப்புதல் மற்றும் ரூ.31,07,91,000 நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:
“ஆளுநர் பேருரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கான பதிலுரையில் 07.01.2022 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை குறித்து பின்வருமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டது:
“கடுமையான இயலாமை, கடுமையான அறிவுசார் குறைபாடு, தசைச்சிதைவுகள் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பராமரிப்புத் தொகையாக வழங்கப்பட்டுக்கொண்டிருக்கக்கூடிய ரூ.1500 இனி ரூ.2000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.இதன் மூலம் 2,06,254 பேர் பயனடைவார்கள்.இதனால்,அரசுக்கு ஆண்டொன்றிற்கு 123 கோடியே 75 இலட்சம் ரூபாய் கூடுதல் செலவாகும்” எனத் தெரிவித்திருந்தார்.
மேலும்,மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநர் கீழ்காணும் 5 வகையான மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1500 மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை வழங்கப்பட்டு வருவதாகவும், இத்திட்டத்திற்கு வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு அதற்கேற்றவாறு செலவினங்கள் மேற்கொள்ள மாநில ஆணையருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாவும் தெரிவித்துள்ளார்:
- மனவளர்ச்சி குன்றியவர்கள்.
- கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள்.
- தசைசிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள்
- தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள்
- முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள்,பார்கின்சன் நோய்,தண்டுவட மரப்பு நோய் ஆகிய பாதிப்புக்குள்ளானவர்கள்.
இந்நிலையில்,ஐந்து வகையான மாற்றுத் திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித் தொகையினை ரூ.1,500 -லிருந்து ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்க நிர்வாக ஒப்புதல் மற்றும் ரூ.31,07,91,000 நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.