70 சதவீதம் பேருக்கு இந்த பிரச்சனை இருக்காம்.. சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை.!
சென்னை : பல் மருத்துவம் என்பது பொதுவாகவே நகர்புறங்கள் சுற்றியே பெரும்பாலும் செயல்படுகிறது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூட நகராட்சி பகுதிகளில் தான் பெரும்பாலான இடங்களில் பல் மருத்துவப் பிரிவு உள்ளது.
பல் மருத்துவம் என்பது தற்போதைய காலகட்டத்தில் அத்தியாவசிய மருத்துவ சேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. தமிழக மக்கள் தொகையில் சுமார் 70 சதவீதம் பேருக்கு வாய் சார்ந்த மருத்துவ பிரச்சனைகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இப்படியான சூழலை கருத்தில் கொண்டு முன்னதாக தமிழக சுகாதாரத்துறை சார்பில் 395 ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல் மருத்துவ சிகிச்சை பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது மேலும் பல்வேறு இடங்களில் பல் மருத்துவ சிகிச்சை பிரிவு ஆரம்பிக்கப்பட உள்ளதாக தமிழக அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியான செய்தி குறிப்பில், தமிழகத்தில் கிராமப்புறங்கள் உட்பட பல்வேறு பகுதிகளிலும் இயங்கி வரும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் வட்டார சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் அனைத்திலும் பல் மருத்துவ சிகிச்சை பிரிவு என்பது ஆரம்பிக்கப்படும் என அதற்கான நடவடிக்கைகளை தமிழக சுகாதாரத்துறை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.