காலை உணவு திட்டம்.! அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளும்.. தமிழக அரசின் விளக்கமும்…

BJP State President Annamalai

சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மானவர்க்ளுக்கு முன்னதாக அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவு திட்டமானது. இன்று தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார். அதே போல, மற்ற மாவட்டங்களில் மாநில அமைச்சர்கள் , எம்பிக்கள் தொடங்கி வைத்தனர் .

இன்று விரிவாக்கம் செய்யப்பட்ட காலை உணவு திட்டம் பற்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த 2020ஆம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்டுத்திய புதிய கல்விகொள்கையில் காலை உணவு திட்டம் கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

தமிழக அரசு, மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொண்டால் காலை உணவு திட்டத்திற்கு மத்திய அரசு நிதி கொடுத்து இருக்கும். மனவர்களுக்கு வழங்கும் காலை உணவில் நிறைய சத்துக்கள் இருக்கவேண்டும். முக்கியமாக சிறுதானியங்கள் சேர்க்கப்பட வேண்டும். இட்லி, தோசை கூடாது. புரதசத்துக்கள், நார் சத்துக்கள் இருக்க வேண்டும். உரிய ஊட்டச்சத்துக்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.  இதில் நிதி பற்றாக்குறை இருந்தால் மத்திய அரசு தருவதற்கு தயாராக உள்ளது என்று அண்ணாமலை குறிப்பிட்டு இருந்தார்.

அண்ணாமலை முன்வைத்த விமர்சனங்களுக்கு தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பு அமைப்பகத்தின் மூலம் பதில் அளித்துள்ளது. அதன் அதிகாரபூர்வ டிவிட்டர் கணக்கில் குறிப்பிடுகையில், தமிழ்நாடு அரசு வழங்கும் காலைச் சிற்றுண்டியில் தோசை, இட்லி வழங்கப்படுவதில்லை. சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட உணவுகள் வழங்கப்படுகிறது.

மாணவர்களுக்கான மதிய உணவில் 5 நாட்களுமே முட்டை வழங்கப்படுகிறது. மேலும், மத்திய அரசு நிர்ணயித்த கலோரிகள், புரதத்தை விடவும் அதிகமாகவே தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிறது. என விளக்கம் அளித்து காலை உணவு திட்டம் மற்றும் மத்திய சத்துணவு திட்டத்தில் வழங்கப்படும் உணவுகளின் வகை மற்றும் அதில் உள்ள சத்துக்கள் பற்றிய பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்