சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 20ஆம் தேதி முதல் தொடங்கி துறை ரீதியிலான மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இன்று நிதித்துறை சார்ப்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், சென்னை மெட்ரோ பணிகள் குறித்தும், நிதி ஒதுக்கீடு குறித்தும் பேசினார்.
அவர் பேசுகையில், கடந்த 2021 – 2022 வரவு செலவு கணக்கீட்டில் மத்திய நிதியமைச்சர் பேசுகையில், சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட பணிகளுக்கு 63,846 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என மத்திய அரசு திட்டம் போல அறிவித்துவிட்டார். அதனை அடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அதற்கு அடிக்கல் நாட்டினார்.
ஆனால் அதன் பிறகு 3 ஆண்டுகள் ஆகியும் தற்போது வரையில் சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்காமல் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ளது மத்திய அரசு. ஆனால் அதன் பிறகு, நாக்பூர், கொச்சியில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட பணிகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்காததால், தமிழக அரசு அதன் முழு செலவையும் மாநில சொந்த நிதியில் இருந்து பணிகளை மேற்கொண்டது. இதனால் தமிழக அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது.
இந்த கூடுதல் நிதிச்சுமையால் இந்த வருடம் மட்டும் 12 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த 12 ஆயிரம் கோடி ரூபாய் இருந்தால் பல்வேறு திட்டங்களை நாம் செயல்படுத்தி இருக்க முடியும்.
25,000 அரசு பேருந்துகள் வாங்கி இருக்கலாம். இதன் மூலம் பேருந்து எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்து இருக்கும். 30 ஆயிரம் கி.மீ தூரம் கிராம சாலைகள் அமைத்து இருக்க முடியும் . 3.5 லட்சம் வீடுகள் கட்டி இருக்க முடியும். 50 ஆயிரம் வகுப்பறைகள் கட்டி இருக்க முடியும். ஆனால் இதனையெல்லாம் செயல்படுத்த முடியாமல் போனதற்கு மத்திய அரசு சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்காததே காரணம் என சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டினார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…