மலையேற ரெடியா.? தமிழக அரசின் சூப்பரான திட்டம்., இப்போதே பதிவு செய்யுங்கள்…
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மலையேற்ற பகுதிகளில் சுற்றுலா செல்வதற்கு தமிழக அரசு 'தமிழ்நாடு மலையேற்றத் திட்டத்தை' தொடங்கியுள்ளது.

சென்னை : தமிழக அரசின் சுற்றுலாத்துறை சார்பில் தற்போது மலையேற்ற விரும்பிகள் பயன்பெரும் வகையில் “தமிழ்நாடு மலையேற்றத் திட்டம்” எனும் திட்டத்தையும் அதற்கான புதிய இணையதளத்தையும் வனத்துறை அமைச்சர் பொன்முடி இன்று துவக்கி வைத்துள்ளார்.
மலையேற விரும்பும் சுற்றுலாவாசிகள் TrekTamilnadu.com எனும் தமிழக அரசின் பிரத்யேக மலையேற்ற தளத்தில் பதிவு செய்து, உரிய அனுமதி மற்றும் மலையேற முறையாக பயிற்சி பெற்ற பழங்குடியின மற்றும் மலைகிராமங்களில் உள்ள இளைஞர்கள் உதவியுடன் மலையேறலாம். இதற்கான முதற்கட்டமாக 300 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
நாம் எந்த பகுதியை தேர்வு செய்கிறோமோ, அந்த மலைப்பகுதி தூரம் என்ன.? கால அளவு, அங்கு நாம் பார்க்கும் வன விலங்குகள் என்னென்ன ,வழிகாட்டு நெறிமுறைகள் என எல்லாம் அதில் பதியப்பட்டு இருக்கும். அதனை அறிந்து கொண்டு நாம் செயல்படுத்த வேண்டும்.