தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் தூத்துக்குடி, திருநெல்வேலியில் பல்வேறு பகுதிகள் குறிப்பாக தாமிரபரணி ஆறு ஓடும் பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தால் பெருமளவு பாதித்துள்ளன. வெள்ளத்தால் தென்மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் பல்வேறு மாணவர்களின் முக்கிய சான்றிதழ்கள் நீரில் மூழ்கின.
தமிழகத்தில் 28-ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!
இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்ட்டனர். ஏனென்றால், அந்த ஒரிஜினல் கல்வி சான்றிதழ்களின் நகலை பெறுவதற்கு சாதாரண நாட்களில் மிகுந்த சிரமமாக இருக்கும். அதனை எளிமைப்படுத்த உயர்கல்வித்துறை முக்கிய நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. அதன்படி, மழை வெள்ளத்தால் சான்றிதழ்களை இழந்த மாணவர்கள் mycertificates.in என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
கனமழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வவேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்ட மாணவர்கள், மழை வெள்ளத்தால் சேதமடைந்த சான்றிதழ் விவகாரங்களை அதில் அளித்து, ஒப்புகை சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டும். பின்னர் அதனை கொண்டு அந்தந்த மாவட்ட கல்வி நிலையங்கள் (பள்ளி, கல்லூரி, பல்கலைகழகங்கள்) வாயிலாக சான்றிதழ் நகல் பெற்றுக்கொள்ளலாம் என தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…