தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டு சங்கம் மூலம் சிறந்த எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையினை 50 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலும்,இது தொடர்பாக அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: “ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டுப் பணி அமைப்பு நிதி (Corpus Fund) மூலம் கிடைக்கும் வட்டித்தொகையிலிருந்து 10 ஆதிதிராவிடர்பழங்குடியினர்,மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் மற்றும் ஆதிதிராவிடர் அல்லாத இனத்தைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர் உள்ளிட்ட 11 எழுத்தாளர்களின் சிறந்த இலக்கிய படைப்பினை தெரிவு செய்து, அவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் தலா ரூ.50,000 அல்லது நூல் வெளியிட ஆகும் செலவு இவற்றில் எது குறைவோ அத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில்,ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டுச் சங்கம் மூலம் சிறந்த எழுத்தாளர்களுக்கு நிதியுதவி வழங்குவதற்கான திருத்திய நடைமுறைகள் மற்றும் உதவித்தொகையினை ரூ.50,000-லிருந்து ரூ.1,00,000 ஆக உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டுள்ளது”, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…